Ticker

6/recent/ticker-posts

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்தார்


கொட்டாவை மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கொட்டாவை, மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் இன்று (8) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments