Ticker

6/recent/ticker-posts

பொது மக்களுக்கு எச்சரிக்கை


மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (08) இரவு 11.30 மணி வரை இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments