Ticker

6/recent/ticker-posts

ஈரானில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு காரணம்


அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,

அப்பாஸ் துறைமுகத்தில் அமைந்துள்ள ரஜாயி துறைமுகத்தில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவங்கள், ஏவுகணைகளுக்குப் பயன்படும் திண்ம எரிபொருளை முறைமை அற்ற விதத்தில் கையாண்டமையினாலேயே நேர்ந்தன என எம்ப்ரியோட் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம், குறித்த துறைமுகம் "சோடியம் பேர் குளோரேட் ஏவுகணை எரிபொருள்" உள்ளடக்கிய கப்பல் ஏற்றுமதி ஒன்றைப் பெற்றுக்கொண்டதாக எம்ப்ரி நிறுவனம் கூறியுள்ளது. குறித்த எரிபொருள், சீனாவிலிருந்து இரு கப்பல்கள் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்ட ஏற்றுமதியின் ஒரு பகுதி எனவும், இது தொடர்பில் பைனான்சியல் டைம்ஸ் சஞ்சிகை ஜனவரி மாதம் வெளியிட்ட செய்தியின் பிரகாரம் தெரியவந்துள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வறிக்கையின்படி, குறித்த எரிபொருள் இஸ்லாமிய குடியரசின் ஏவுகணை கையிருப்புகளை மீள்நிரப்பப் பயன்படவிருந்தது.




திண்ம எரிபொருள் ஏற்றுமதி தவறாகக் கையாளப்பட்டமையின் பின்னரே தீப் பரவல் ஆரம்பித்ததாக வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள் காட்டி எம்ப்ரி தெரிவித்துள்ளது. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் பகுப்பாய்வு செய்த கப்பல் கண்காணிப்புத் தரவுகள், இரசாயனப் பொருட்களை எடுத்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல்களில் ஒன்று கடந்த மார்ச் மாதம் குறிப்பிடப்பட்ட துறைமுகத்திற்கு அண்மையில் நின்றிருந்தமையைக் காட்டுகின்றன.

இந்த ஏற்றுமதியைப் பெற்றுக்கொண்டமையை இஸ்லாமிய குடியரசு இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதுடன், சனிக்கிழமை இது குறித்த கருத்து கோரலுக்கு ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள அதன் பிரதிநிதிகள் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments