தங்காலை - வீரகெட்டிய வீதியில் 3ஆவது மைல்கல் பகுதியில் இன்று (16) இரண்டு பஸ்கள் மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வலஸ்முல்லயிலிருந்து தங்காலை நோக்கி பயணித்த பஸ் ஒன்று மற்றுமொரு பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





0 Comments