சாய்ந்தமருதைச் சேர்ந்த ஆழ்கடல் படகு ஒன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று திரும்பும் வழியில் திருகோணமலையில் அமைந்துள்ள கப்பல் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சற்று தொலைவில் கற்பாறையில் மோதுண்டதால் படகு முற்றாக நீரில் மூழ்கியது.
மீனவர்கள் எந்த விதமான ஆபத்துகளும் இன்றி கடற்படையினரால் மீட்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நீரில் மூழ்கிய படகு மீட்க முடியாத நிலையில் அதன் உடமைகளை விரைவாகச் சென்று நேற்று
(01/01/2025) கல்முனை ஆழ்கடல் சுழியோடிகளால் வெற்றிகரமாக மீட்கப்பட்டு உரிய மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.










0 Comments