Ticker

6/recent/ticker-posts

விலங்குகளுக்கான இலைகளை கொண்டு செல்லப் பயன்படுத்திய திசைகாட்டி எம்பியின் வாகனம்: விசாரணைகள் ஆரம்பம்!


அரசாங்கத்துச் சொந்தமான வாகனத்தில் விலங்குகளுக்கான இலைகளை கொண்டு சென்றமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கட்டுப்பாட்டு நாயகம் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த வாகனம் சுற்றுலா பிரதியமைச்சர் ருவன் ரணசிங்கவின் பிரத்தியேக செயலாளரினால் பெறப்பட்டு பதுளை மாவட்டத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி எம்.பி ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த வாகனம் மூலம் விலங்குகளுக்கு தேவையான புல் கொண்டு செல்லப்படுவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments