போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து காசாவிற்குள் புலம்பெயர்ந்து சென்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள் , அதில் பெரும்பாலான வீடுகள் தரைமட்டமாகிவிட்டது எனினும் மீதமிருக்கும் ஒரு சில வீடுகள் மற்றும் பகுதி இடிந்த வீடுகளுக்குக்குள் வீட்டின் உரிமையாளர்கள் சென்ற போது..., அங்கே ஓர் கடிதம் கண்டெடுக்கபட்டதாக பாலஸ்தீன் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த கடிதங்கள் பாலஸ்தீனிய ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் போராளிகள் விட்டுச் சென்ற கடிதங்களாகும்..,
அல்-கஸ்ஸாம் போராளிகள் எழுதிய அக்கடிதத்திலிருந்து..,
"எங்கள் மக்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும்..,
வல்ல இறைவன் உங்கள் முயற்சிகள், பொறுமை, தியாகங்கள், இரத்தம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வான் மேலும் நீங்கள் இழந்த அனைத்திற்கும் சிறந்ததை அவன் உங்களுக்கு ஈடுசெய்யவானாக... நீங்கள் உங்கள் மார்க்கத்திற்காகவும் உங்கள் தாய் பூமிக்காகவும் துன்பப்பட்டு, துன்புறுத்தப்பட்டீர்கள், இடம்பெயர்ந்துள்ளீர்கள், ஒடுக்கப்பட்டிருக்கிறீர்கள் உங்களுக்கு மேலான கூலி உண்டு.
மேலும்
“எங்களை மன்னியுங்கள், எங்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். (போரின் போது உங்கள் வீட்டில் நாங்கள் பதுங்கியிருந்தபோது உங்கள் அனுமதியின்றி ) நாங்கள் உங்கள் பொருட்களைப் பயன்படுத்தினோம், உங்கள் வீட்டிற்குள் நுழைந்தோம், உங்கள் உணவை உண்டோம், உங்கள் பானங்களைக் குடித்தோம், உங்கள் ஆடைகளை அணிந்தோம்.
பாலஸ்தீனத்தின் ஒவ்வொரு குழந்தையின் அழுகைக்கும், ஒவ்வொரு வலிக்கும், ஒவ்வொரு அநீதிக்கும், துயரத்தின் ஒவ்வொரு கண்ணீருக்கும் எங்களை மன்னியுங்கள்.
இறைவன் அருளால்
நாங்கள் எங்களால் இயன்றவரை போராடினோம்,
எங்கள் ஒவ்வொருவரால் என்ன செய்ய முடியுமோ அதைக் கொடுத்தோம்.
நாங்கள் எந்நிலையிலும் சரணடையவில்லை,
நாங்கள் புறக்கணித்து ஓடவில்லை,
நாங்கள் (உங்களுக்கும் , தாய் பூமிக்கும்) துரோகம் செய்யவில்லை,
எங்கள் (காசா )கோட்டைகளை நாங்கள் எந்நிலையிலும் கைவிடவில்லை.
“ பாலஸ்தீன் விடுதலை பயணத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெற்றியை நோக்கி கண்ணியத்துடன் முன்னேறி கொண்டிருக்கிறோம்
மக்களாகிய உங்கள் உறுதியையும்,
உங்கள் பாதுகாப்பையும்,
உங்கள் பொறுமையையும் இறைவன் ஏற்றுகொள்வானாக.
இறைவன் நாடினால், உங்களுடனான எங்கள் சந்திப்பு அல்-அக்ஸா மசூதியின் முற்றத்தில் இருக்கும்.
என்று முடிகிறது இந்த கடிதம்.
போராளிகள் தங்கள் மக்களின் விஷயத்தில் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைவும் எந்த நிலையிலும் சோர்ந்துவிடாமல் நிலைகுலையாமல் உறுதிபாட்டுடன் இருப்பதையும் வெளிபடுத்தியுள்ளார்கள்.
போர் சூழலில் வீட்டில் கிடந்த உணவை உண்டதிற்கும் , வீட்டை பயன்படுத்தியதற்கெல்லாம் மக்களிடம் மன்னிப்பு கோரியது தூய்மையான ஈமானிய அச்சம். போராளிகளுக்கு இறைவன் அருள்புரியட்டும்.
#FreePalestine


0 Comments