இறக்காமத்தில் ஐஸ் போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திய 21 வயதுடைய இளைஞன் கைது!*
தில்சாத் பர்வீஸ்
ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் ஊடாக விற்பனை செய்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அத்தோடு மோட்டார் சைக்கிளையும் கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றி உள்ளனர்.
அத்தோடு மோட்டார் சைக்கிளையும் கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றி உள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (04) சனிக்கிழமை பிற்பகல் 02.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
அம்பாறை மாவட்டம், இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுநகர் வீதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று சனிக்கிழமை (4) பிற்பகல் 2.30 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினைப் பின்தொடர்ந்த விசேட அதிரடிப் படை அதிகாரிகள் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது, இறக்காமம் 03 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 25 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.


0 Comments