Ticker

6/recent/ticker-posts

கொரனா ஜனாசாக்களை எரிப்பதற்கு முன்னின்று நடத்தியவருக்கு சுகாதார, ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக அனில்


#சிஸ்டம் சிஸ்டமா போகுது... அதை #சேஞ்ச் பண்ண வந்த ஆட்களுக்கு #தொண்டைக்க_கிடக்குது 

சிஸ்டம் சேஞ்ச் சாத்தியப்படுவதற்கு பிரார்த்தியுங்கள்..!! தேசிய ஒருமைப்பாட்டுக்கான கௌரவ பிரதி அமைச்சர் Ash sheikh Muneer Mulaffer Muneer Mulaffer அவர்களே..!!


கோவிட் பெருந்தொற்று காலத்தில் பெருந் தொற்றால் மரணித்த முஸ்லிம் மக்களின் இறந்த உடல் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் நாட்டிலும் சர்வதேசத்திலும் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் நிபுணர்களினுடைய அபிப்பிராயம் போன்றவற்றை நிராகரித்து பலவந்தமாக எரிக்கப்பட்டது.

அவ்வாறு எரிப்பதற்கு பல்வேறு சமூக அரசியல் மட்ட எதிர்ப்புகள் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் வெளிக்காட்டப்பட்டது. 


குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனம் World Health Organization (WHO) சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் International Human Rights Commission-IHRC முஸ்லிம் நாடுகளின் ஒன்றியம் Organisation of Islamic Cooperation (OIC) Human Rights Watch போன்றவற்றின் கண்டனங்கள் கவனிக்கத்தக்கது. 

அப்போது சுகாதார சேவைகள் பனிப்பாளர் நாயகமாக கடமையாற்றியவர் தான் இந்த அணில் ஜாசிங்க. 


இறந்த முஸ்லிம்களினதும் எரிப்பதற்கு விருப்பமற்ற பிற சகோதரர்கள் எனதும் உடல்களை அவர்களுடைய விருப்பத்துக்கு எதிராக கட்டாயமாக தகனமூட்டுவது #forcedcremation சம்பந்தமான இவருடைய அறிக்கைகளால் இவர் மீது பலத்த கண்டனங்கள் அக்காலத்தில் பதிவு செய்யப்பட்டது.

ஒரு கட்டத்தில் கட்டாய தகனத்துக்கு காரணமானவர்கள் அரசாங்கத்தின் எந்த ஒரு முக்கிய பதவிகளும் அமர்த்தப்படக் கூடாது என்கிற வாதம் பாராளுமன்றத்தில் Parliament of Sri Lanka பேசப்பட்டது.


தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் வந்த பின்னரும் Covid-19 காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட கட்டாய எரிப்புக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதற்கும் மற்றும் தண்டிப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்கள்.


இப்போது சுகாதார அமைச்சின் செயலாளராக அவரை நியமித்திருக்கிறார்கள். Ministry of Health - Sri Lanka 


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கணிசமான முஸ்லிம்கள் அவர்களது பாரம்பரிய அரசியல் கட்சிகளை அதன் தலைவர்களைப் புறந்தள்ளி வாக்களித்திருக்கிறார்.


அதற்காக இல்லாவிட்டாலும் சகவாழ்வு இன ஐக்கியம் தேசிய ஒருமைப்பாடு போன்றவைகள் குறித்து தங்களை மிகவும் முற்போக்கானவர்களாக காட்டிக் கொள்ளும் தேசிய மக்கள் சக்தி இந்த இரண்டு மாத காலத்தில் இவைகளை சாதிக்கக் கூடிய மனநிலைகளை காட்டவில்லை என்பது அவதானிக்கத் தக்கது. NPP Srilanka 


சிஸ்டம் சேஞ்ச் சாத்தியப்படுவதற்கு பிரார்த்தியுங்கள்...!!

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமனம்


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவை நியமித்துள்ளார். 


அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவினால் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. 

Post a Comment

0 Comments