Ticker

6/recent/ticker-posts

அம்பாறையில் கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட அதிரடிப் படையினரினால் முற்றுகை; ஒருவர் கைது!


அம்பாறை மாவட்டம் சவளைக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பின்னால் உள்ள பகுதியில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று சனிக்கிழமை (21) இரவு 08.00 மணியளவில் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினரினால் முற்றுகையிடப்பட்டது.

சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தையும், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த சம்மாந்துறை, வீரமுனை 03 பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 80,000 மில்லி லிட்டர் கசிப்பு, 170,000 மில்லி லிட்டர் கோடா, 130,000 மில்லி லிட்டர் வடி, 210 லிட்டர் இரும்பு பரள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. சுமார் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு அதிக பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபரை சவளைக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளைக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும், இந்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை விசேட அதிரடிப்படை உப பொலிஸ் பரிசோதகர்களான எம்.ஜி.ஏ.கே. ஜெயஸ்ரீ மற்றும் ஓ.வி.கே.டி. விஜயஸ்ரீ, விசேட அதிரடிப் படை சார்ஜன் ரத்னாயக்க, சார்ஜன் வஸ்நாயக்க,சார்ஜன் சதுரங்க விசேட அதிரடிப் படை பொலிஸ் உத்தியோகத்தர்களான பண்டார, சேனாநாயக்க,குமார,பண்டார விசேட அதிரடிப் படை சாரதி குமார ஆகியோரினால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments