179 பேர் இறந்த விமான விபத்தில்.. 2 பேர் மட்டும் பிழைத்தது எப்படி? எங்கே அமர்ந்திருந்தார்கள் தெரியுமா.!
181 பேருடன் பயணித்த Jeju Air Flight 2216 இன்று அதிகாலை பெரும் விபத்துக்கு உள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 179 பேர் பலியானார்கள். 2 பேர் மட்டும் தப்பித்தனர்.
தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 177 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து திரும்பிய Jeju Air Flight 2216 விமானம் தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 28 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது,
விமானம் சுவற்றில் மோதிய உடன் தீப்பிடித்தது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் அவர்கள் மட்டும் தப்பித்தது எப்படி என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவர்கள் இருவரும் கடைசி ரோவில் அமர்ந்து இருந்தனர். இரண்டு பேருமே ஜன்னல் பக்கம் இருந்துள்ளனர். அருகிலேயே எமர்ஜென்சி கதவும் இருந்துள்ளது. இதனால் அவர்கள் எளிதாக தப்பித்துள்ளனர்.
மற்றபடி விபத்தில் சிக்கிய எல்லோரும் உடல் நசுங்கி.. அதன்பின் தீயில் கருகி பலியாகி உள்ளனர். முன் பக்கம் முதல் கடைசி ரோவிற்கு முன்பு வரை விமானம் நசுங்கி வெடித்தது. இதனால் மற்ற எல்லோரும் பலியாகி உள்ளனர்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
ஆனால், பறவை மோதல் அல்லது மோசமான வானிலை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை ஊகிக்கிறது
இந்த விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று முவான் தீயணைப்புத் துறையின் தலைவர் லீ ஜியோங்-ஹியூன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
"விமானத்தின் வால் பகுதி அப்படியே இருக்கிறது. ஆனால் விமானத்தின் மற்ற பகுதிகளின் வடிவத்தை யாராலும் அடையாளம் காண முடியவில்லை", என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது.
80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
தற்போது முவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்கு பின் தொழில்நுட்ப பிரச்சனைதான் காரணமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடக்கும். விமானத்தில் பிளாக் பாக்ஸ் இன்னும் கிடைக்கவில்லை.
அது கிடைத்தவுடன் விசாரணை தொடங்கும் என்று அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். தென்கொரியாவில் ஏற்கனவே அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு இடையே இந்த விபத்து அரசுக்கு எதிராக மாறி உள்ளது.
இந்த விபத்து தொடர்பான திகிலூட்டும் காட்சிகள் வெளியாகி வருகிறது, 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர் போயிங் 737-800, தரையிறங்கும் போது லேண்டிங் கியர் வேலை செய்யாமல் போனதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து பிரிந்து சாலையில் சறுக்கி சென்று உள்ளது. அதோடு விமானத்தின் சக்கரங்கள் வெளியே வராமல் உள்ளேயே இருந்துள்ளது.
இப்படி விமானம் சரிந்துபடியே சென்று சுவற்றில் சட்டென மோதி உள்ளது. மோதிய உடன் விமானம் தீ பிடித்து பற்றி எரிந்து உள்ளது.
175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர் போயிங் 737-800, தரையிறங்கும் போது லேண்டிங் கியர் வேலை செய்யாமல் போனதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து "பெல்லி லேண்டிங்" செய்ய அந்த விமானம் முயன்றுள்ளது. அந்த பெல்லி லேண்டிங் பயன் அளிக்காமல் விமானம் சறுக்கி சென்று சுவற்றில் மோதி உள்ளது.
பெல்லி லேண்டிங் செய்ய ஓடுபாதையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் விமானம் தரையிறங்கிய உடன் அது கட்டுப்பாடின்றி செல்ல தொடங்கியது.
பெல்லி லேண்டிங் செய்த உடன் மிக மிக வேகமாக விமானம் சறுக்கி சென்றது. அப்படியே சென்று அந்த விமானம் சுவற்றில் மோதியது.
விமானம் தரையிறங்கும் போது லேண்டிங் கியர் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தில் இருந்து திரும்பிய விமானம், தரையிறங்க முயன்றபோது,இந்த சம்பவம் நிகழ்ந்தது.
விமானம் விபத்தில் சிக்குவதற்கு சற்று முன்பாக, அதில் இருந்த பயணி ஒருவர் தனது குடும்ப உறுப்பினருக்கு செல்போனில் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த குறுஞ்செய்தியில், விமானத்தில் இறக்கையில் ஒரு பறவை மோதியதாக அந்த பயணி குறிப்பிட்டிருந்தார் என்கிறது அந்த செய்தி. அத்துடன், "எனது கடைசி வார்த்தைகளை அனுப்ப வேண்டுமா?" என்றும் குறுந்தகவலில் அந்த பயணி கூறியிருந்ததாக உள்ளூர் ஊடகம் கூறுகிறது.
அதன் பிறகு, விமானத்தில் இருந்த அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற உறவினர் தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவர் முவானில் இந்த பகுதியை "ஒரு சிறப்பு பேரிடர் மண்டலமாக" அறிவித்துள்ளார்.
"இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அவர் கூறினார்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மணிப்பு கேட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார்.
மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்கு மாற்றி ஆன்லைனில் மன்னிப்பு கோரியது.
முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.
ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும்.
தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நன்றி!







0 Comments