நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் பற்றி குறிப்பிட்ட உண்மைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
எம்.பி.க்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருப்பதாகவும், அவர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் சம்பளம் பொது நிதியில் வரவு வைக்கப்படும், அதனால் தனக்கு போதிய அளவு கொடுப்பனவு கிடைக்கும் என தெரண தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘Wada Pitiya’நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
மேலும் இது குறித்து எதிர்கட்சிகள் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்றும், இதற்கு முன்னர் இருந்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் கூட இம்முறையில் தமது சம்பளத்தினை பொது நிதியில் வரவு வைத்ததாகவும் அவர்கள் எந்த நெருக்கடிக்கும் முகங்கொடுக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
0 Comments