Ticker

6/recent/ticker-posts

Video - இஸ்ரேலிய தாக்குதல்கள் 'வரையறுக்கப்பட்ட சேதத்தை' ஏற்படுத்தியதாக ஈரான் அறிவிப்பு


ஈரானில் போர்ப் பதற்றம்! ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்!
ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக சனிக்கிழமை(அக். 26) அதிகாலை இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் வகையில்-இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ஈரானில் உள்ள ஆட்சியும் பிராந்தியத்தில் அதன் பினாமிகளும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர் - ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில். உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது.


எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்.
“ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக”
இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.


ஈரானில் உள்ள 3 மாகாணங்களில் காணப்படும் இராணுவ தளங்களை குறிவைத்து, இஸ்ரேலிய தாக்குதல்கள் 'வரையறுக்கப்பட்ட சேதத்தை' ஏற்படுத்தியதாக ஈரானின் இராணுவம் உறுதிப்படுத்தியது.


குறித்த தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


இன்று -26- அதிகாலை வேளையில் ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
 JM News

Post a Comment

0 Comments