Ticker

6/recent/ticker-posts

Video - இஸ்ரேலிய தாக்குதல்களில் எரிக்கப்பட்ட மனிதர்களைக் காட்டும் படங்கள் 'பயங்கரமானவை' - ஜேர்மனி


இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு எரிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்களைக் காட்டும் காஸாவில் இருந்து வெளிவரும் படங்கள் "பயங்கரமானவை" என்று ஜேர்மன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் பிஷ்ஷர் கூறினார்.


மத்திய காஸா பகுதியில் அல்- அக்ஸா மருத்துவமணையின் அருகே இஸ்ரேல் நேற்று இரவு குண்டு வீசி தாக்கியதை விபரிக்கும் விதமாக ஒரு இளைஞனின் செய்தியை பற்றி 
பத்திரிகையாளர் ஹானி அபு ரஸ்ஸாக் எழுதுகிறார்:

 கிழிந்த கூடாரத் துணிகளுக்கு மத்தியில், இந்த இளைஞன் தனது நீட்டிய கை, சாய்ந்த தலை மற்றும் வடக்கு காசாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பும் அவரது கனவுகளின் எதிரொலியைக் கேட்கும் அவரது காது ஆகியவை அனைத்தும் அமைதியாக எரிந்து கொண்டிருந்தன.

 நம்மைத் தவிர வேறு யாரும் பார்க்காத ஒரு வலி மிகுந்த தருனத்துக்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம்.

 ஆம், நெருப்பு அவன் உடம்பின் முன் பகுதியில் இருந்து நெஞ்சு வரை விழுங்கிக் கொண்டிருந்தது, அவன் அலறாமல் எரிந்து கொண்டிருந்தான். எங்களால் அவனை காப்பாற்ற முடியவில்லை அவன் அப்படியே ஷஹிதானான்....

இது போல் ஏராளமான சகிக்க முடியாத காட்சிகளை ஒவ்வொரு நாளும் நாங்கள்  பார்க்கிறோம் இனி காஸாவில் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை ஒரு வருட காலமாக எல்லா துண்பங்களையும்,வேதனைகளையும் பார்த்து முடித்து விட்டோம்...... நாங்கள் எல்லா விடையங்களையும் அல்லாஹ்விடம் மட்டுமே பொருப்பு சாட்டுகின்றோம்.... 

எங்களுக்கு எதிரான எல்லா படுகொலைகளையும் முழு உலகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது என்பதே நிதர்சனமான உண்மை😢...



Post a Comment

0 Comments