Ticker

6/recent/ticker-posts

விமான நிலையத்தில் கட்டித்தழுவி வழியனுப்ப கட்டுப்பாடு


நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டனிடன் விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதியில் கட்டிப்பிடிப்பதற்கு மூன்று நிமிட வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய விதிமுறை செப்டம்பர் 26ஆம் திகதி அறிமுகமானது.

அங்குள்ள அறிவிப்பு பலகையில் ‘கட்டி தழுவுவதற்கான நேரம் அதிகப்பட்சம் 3 நிமிடங்கள். நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்’ என அச்சிடப்பட்டுள்ளது.

காலதாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் பயணிகளின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகத்தினர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments