Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேல் வான் தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர்




வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர்.


உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


கட்டிட இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கியுள்ளதாக உதவிக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார திணைக்கள ஊழியர்கள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையினால் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Post a Comment

0 Comments