களுவாஞ்சிக்குடி கல்முனை பிராதன வீதியில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அண்மித்த பகுதியில் நேற்று (13) பிற்பகல் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலைலை சேர்ந்த 16 வயதுடைய ரவீந்திரன் என்ற சிறுவனே சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கல்முனையில் இருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிக்குடியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக்குத்கு அண்மையில் வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-


0 Comments