பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டி தொடரில் இலங்கை வீரர் சமித்த துலான் உலக சாதனை படைத்துள்ளார்.


ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த தலான் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.


எப் 44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் துலான் சாதனை படைத்துள்ளார்.


எப் 64 போட்டியில் சமித்த துலான், 67.03 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

எனினும் எப் 44 பிரிவில் ஏற்கனவே சமித்த துலான் நிலை நாட்டியிருந்த உலச சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதுடன், அவுஸ்திரேலியா வெள்ளி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியில், எப் 44 பிரிவில் சமித்த துலான் வெண்கல பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.