நாமல் ராஜபக்சவின் சொந்தத் தேர்தல் தொகுதியான பெலியத்தை தேர்தல் தொகுதியில் அவர் படுதோல்வியடைந்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவின் தேர்தல் தொகுதியும், ராஜபக்ச குடும்பத்தின் பரம்பரை தொகுதியுமான பெலியத்தையில் அனுரகுமார திசாநாயக்க பாரிய வெற்றியீட்டியுள்ளார்.
அவர் 34,320 வாக்குகளைப் பெற்று 53.43 வீத வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள சஜித் பிரேமதாச 16,820 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 5,460 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
வெறுமனே 5385 வாக்குகளுடன் நாமல் தனது சொந்தத் தேர்தல் தொகுதியில் நான்காவது இடத்தைப் பிடித்து படுதோல்வியடைந்துள்ளார்.
0 Comments