நாட்டில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பகுப்பாய்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பகுப்பாய்வு அறிக்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.




அதோடு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதாகவும், புதிய நாடாளுமன்றக் கூட்டத்தின் பின்னர் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.


மேலும் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என இலங்கை மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.