இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ், NPP இன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியானது உண்மையான மாற்றத்திற்கான பொதுமக்களின் வலுவான விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
"இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என்பது இப்போது தெளிவாகிறது" என்று பீரிஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி கணிசமான சவால்களை எதிர்கொள்வார் என்று பீரிஸ் ஒப்புக்கொண்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பரந்த அதிகாரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், பொதுப் பொறுப்புணர்வுடன் அவற்றைப் பிரயோகிக்குமாறும் திஸாநாயக்கவை பீரிஸ் எச்சரித்தார்.
"ஜனாதிபதி என்ற ரீதியில் அவர் ஒரு ஐக்கியமான நபராக இருக்க வேண்டும் என்பதை புதிய ஜனாதிபதி உணர்ந்து கொள்ள வேண்டும், கிட்டத்தட்ட பாதி வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை, ஆனால் அவர் அவர்களின் ஜனாதிபதி என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று பீரிஸ் கூறினார்.
0 Comments