முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தமக்கு முழுமையான அளவில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நேரடியாக கோராது, “ஜனாதிபதி அநுர தமக்கு பூரண பொதுமன்னிப்பு வழங்குவாரா தம்பி” என முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரஞ்சன், நாடு திரும்பும் வழியில் இந்த பதிவினை இட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமரியாதை செய்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும், அவருக்கு பூரணமாக மன்னிப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவரினால் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை காணப்படுகின்றது.

நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரஞ்சன் ராமநாயக்க, பூரண பொதுமன்னிப்பு வழங்கப்படுமா என புதிய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.