வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், முன்னதாக இன்றைய தினம் கமலா ஹாரிஸ் மற்றும் பைடன் இடையே விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தின் ரூல்ஸ் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதில் கமலா ஹாரிஸ் சாதகமாக ஒரு விதி இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. வரும் நவ. 5ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகின்றனர்.


அதற்கு முன்னதாக இன்றைய தினம் இரு தலைவர்களுக்கு இடையே விவாதம் நடக்கிறது. அமெரிக்க நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை இரவு விவாதம் நடக்கிறது. டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே நடக்கும் முதல் விவாதம் இதுவாகும். விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் சில மாதங்களில் நடக்கும் நிலையில், இந்த விவாதம் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அங்குக் கட்சி சாராமல் இருப்போர் பெரும்பாலும் விவாதத்தைப் பார்த்தே வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு விவாதம் அங்கு முக்கியமானதாகும். 

இந்த விவாதம் ஏபிசி செய்தி நிறுவனத்தில் நேரலை செய்யப்படுகிறது. கடந்த முறை டிரம்ப்- பைடன் இடையே நடந்த விவாதம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். இந்த விவாதத்திற்கு முன்பு வரை சர்வே முடிவுகளில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், இந்த விவாதம் அனைத்தையும் புரட்டிப் போட்டது. பைடன் இந்த விவாதத்தில் திக்கித் திணற, டிரம்ப் இதில் அடித்து நொறுங்கினார். அதன் பிறகு நடந்த சர்வேக்களில் டிரம்ப் ஆதரவும் அதிகரித்தது. இந்த விவாதத்தின் பின்னரே அழுத்தம் அதிகரிக்க டிரம்ப் அதிபர் ரேஸில் இருந்தும் விலகினார். அதீத ஆவேசத்தில் டிரம்ப்.. அமைதியாக பார்க்கும் கமலா ஹாரிஸ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்! என்ன ஆகும் 

ரூல்ஸ்: இந்தச் சூழலில் தான் இப்போது கமலா ஹாரிஸ்- டிரம்ப் இடையே விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தின் ரூல்ஸ் சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது.. இதில் டிரம்பிற்கு பின்னடைவே தருவது போல ஒரு ரூல்ஸ் இருக்கிறது. அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். டிரம்ப்: அதாவது எப்போதும் எதிர் தரப்பை காலி செய்யும் வகையில், அவர்களைப் பேசவே விடாத வகையில் குறுக்கே இடைமறித்து இடைமறித்துப் பேசுவது தான் டிரம்ப் ஸ்டைல். கடந்த 2020 அதிபர் தேர்தல் சமயத்தில் டிரம்ப்- பைடன் இடையேயான விவாதத்தில் அவர் இதையே தான் செய்தார். அப்போது ஒரு கட்டத்தில் பைடன் வெறுத்துப் போய் "Will you shut up, man?" என்று கூறியிருப்பார். அப்போது டிரம்ப் அதிபர் பதவியில் இருந்த நிலையில், அதிபரைப் பார்த்து பைடன் இப்படிச் சொன்னது பேசுபொருள் ஆனது. 

டிரம்ப் இதுபோல தொடர்ந்து இடை மறித்துப் பேசுவதாலேயே இந்தாண்டு பைடன்- டிரம்ப் இடையே விவாதம் நடந்த போது மைக் முடக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே கமலா ஹாரிஸ்- டிரம்ப் விவாதத்தின் போதும் அதே ரூல்ஸ் பின்பற்றப்படுமாம். யார் பேசுகிறாரோ அவரது மைக் மட்டுமே ஆன் செய்யப்படும். எதிர் தரப்பினர் பேசும் போது மைக் ஆஃப் செய்யப்படும். எனவே, அவர் என்ன பேசினாலும் அது கேட்காது. இருவரும் மாறி மாறி கேள்வி கேட்க அனுமதி இல்லை. 

இதுதான் ரூல்ஸ்: தொகுப்பாளர்கள் மட்டுமே கேள்விகளைக் கேட்க அனுமதிக்கப்படுவார்கள். எந்த கேள்வி கேட்கப்படும்.. எது தொடர்பாகக் கேட்கப்படும் உள்ளிட்ட எந்தவொரு தகவலும் வேட்பாளர்களுடன் முன்கூட்டியே பகிரப்படாது என்றும் ஏபிசி அறிவித்துள்ளது. டிரம்பின் ஸ்டைலே எதிர்த் தரப்பைப் பேச விடாமல் தடுத்துப் பேசுவது தான். ஆனால், இப்போது எதற்கு எதிராக ரூல்ஸ் இருக்கிறது. இது கமலா ஹாரிஸுக்கு நல்லதொரு செய்தியாகவே பார்க்கப்படுகிறது.