பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தேரர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

வீரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரபெலெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்த 65 வயதுடைய தேரர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.




இந்த தேரர் இரண்டு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.


இந்நிலையில் தேரர் சிறைச்சாலையில் வைத்து திடீரென சுகயீனமுற்றுள்ளதோடு அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.