கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரணங்கர வீதியிலுள்ள கடையொன்றிற்குள் இருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூடு நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் குறித்த கடையின் உரிமையாளர் என தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணமோ, சந்தேகநபர்கள் பற்றிய தகவல்களோ இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments