நாடு அநுரவோடு' தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் அநுராதபுரத்தில் நடைபெற்ற போது, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்த கருத்து,
முஸ்லிம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக எம்மைச்சுற்றி அணிதிரண்டுள்ள விதத்தை நாங்கள் கண்டோம். அதனால் இலங்கையில் முதல் தடவையாக மிகவும் தனித்துவமான அரசாங்கமொன்று அமையப்போகிறது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க (பெருவெற்றிக்கான நுகேகொடை கூட்டம் - 18-09-2024)
இலங்கை வரலாற்றில் பல்வேறு அரசாங்கங்கள் உருவாகியுள்ளன. அவ்வனைத்து அரசாங்கங்களும் கடந்த காலங்களில் தமது அரசியல் வெற்றிகளுக்காக இனவாதத்தை, மதவாதத்தை, குல மரபினை பயன்படுத்திக் கொண்டார்கள். எனினும், நாங்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உயிரூட்டியவண்ணம் இந்த வெற்றியை அண்மித்துள்ளோம். இந்த இறுதி கூட்டத்திலே கூறுவதற்கு தீர்மானித்திருக்காவிட்டாலும் கூட இந்த அரசியல் மேடையில், எமது நாட்டின் இந்த அரசியல் போர்க்களத்தில் இந்த இனவாத மதவாத கோஷங்கள் அகற்றப்பட வேண்டுமென்பதை ஓரளவுக்காவது வலியுறுத்த வேண்டும் என எண்ணினேன். நீங்கள் பார்த்திருப்பீர்கள் சஜித் பிரேமதாசவின் அனைத்து தேர்தல் மேடைகளும் மீண்டும் இனவாதம் மதவாதம் நடத்தையை நோக்கமாகக் கொண்டவையாகவே இருந்தன. ஆரம்பத்தில் அவர்கள் கண்டி மற்றும் குருநாகல் கூட்டங்களில் குறிப்பிடுகிறாரகள், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தவுடன் கண்டி பெரகராவை நிறுத்தி விடுவார்கள். எத்கந்துவிகாரை பெரகரவை நிறுத்தி விடுவார்கள். அவை என்ன? எமது நாகரீகம் கட்டியெழுப்பப்படும் பொழுது ஒரு தேசமாக, எமக்கான கலாசார மரபுரிமைகள் அவை.
அவை ஐக்கிய மக்கள் சக்திக்கோ எமக்கோ ரணிலுக்கோ மொட்டு கட்சிக்கோ தொடர்புடையவையல்ல. அவை எமது தேசிய மரபுரிமைகள். எமது நாகரீகத்தில் எமக்கு எஞ்சியுள்ள கலாசார பெறுமதிகள். ஆனால் சஜித் பிரேமதாச போன்றோர் அவற்றை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் தமது அரசியல் போர்க்களத்தில் கோஷமாகக் கொண்டார்கள். நாம் ஆட்சிக்கு வந்தால் பௌத்த தேரர்களுக்கு தானம் வழங்குதல் நிறுத்தப்படும் என்றார்கள். நாங்கள் கேட்பது ஒன்று தான் இந்த நாட்டில் தேரர்களுக்கு அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தானங்கள் வழங்கப்படுவதில்லை. அரசாங்கச் சுற்றறிக்கையின் மூலம் அல்ல பிக்குகளுக்கு தானம் வழங்குவது. எமது நாட்டில் நாகரீகம் கட்டியெழுப்பப்பட்ட விதம். எமது நாட்டில் பௌத்த மதத்தவர்கள் தாம் வளர்த்துக் கொண்டுள்ள சமய நம்பிக்கையின் இயல்புகள், அவர்கள் தமது சமயத்தைக் குறித்து கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்படுத்தல்கள், இவை அரசாங்கமொன்று மாறியதன் காரணமாக மாற்றமடையுமா? அவ்வாறான கீழ்மட்ட நிலைக்கு சஜித் பிரேமதாச போன்றோர் இந்த தேர்தல் செயற்பாட்டைக் கொண்டு வந்தார்கள்.
அதுமட்டுமல்ல, பௌத்த சிங்கள மக்களுக்கு இவ்வாறு கூறிக்கொண்டு, கிழக்கிற்குச் சென்று அவரது சீடர் ஹிஸ்புல்லாஹ் கூறுகிறார், தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் இப்பொழுது முஸ்லிம்கள் ராமஸான் கொண்டாடுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் இரண்டில் ஒன்று தேர்ந்தெடுக்க வேண்டுமாம். இரண்டும் முடியாதாம். எமக்கு வேறு வேலையில்லை தானே. இஸ்லாமியர்கள் ஒரு நாளில் ஐந்து வேளை தொழுகையில் ஈடுபடுகிறார்கள். ஹிஸ்புல்லாஹ் சஜித்தின் மேடையில் கூறுகிறார், நாம் ஆட்சியமைத்தால் ஐந்து வேளை தொழ அனுமதிக்க மாட்டோமாம். தாடி வைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டோமாம். கீழ்த்தரமான அரசியல். அதனால் சஜித் பிரேமதாசவின் இந்த கைவிடப்பட்ட நிலைமையை இந்த வங்குரோத்து நிலைமையைக் குறித்து நாங்கள் வருந்துகின்றோம்.
ஆனால் இந்த தேர்தலின் பின்னர் எமது நாட்டில் எந்த மூலையிலாவது இனவாதத்தைத் தூண்டும்படியான, இனவாதத்தை ஊக்குவிக்கும்படியான, மற்றவரை அசட்டைச் செய்யும்படியான, அடுத்தவரின் அடையாளங்களுக்கு மதிப்பளிக்காத வகையிலான, அடுத்தவரின் அடையாளங்களைத் தனிமைப்படுத்தும்படியான எந்தவொரு நடவடிக்கைக்கும், எந்தவொரு வெளிப்பாடுகளுக்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இடமில்லை. இந்த நாட்டை மீட்டெடுக்க அந்த இடத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மறுபக்கம் நான் சஜித் பிரேமதாசவைக் குறித்து பெரிதாகக் கலவரமடையவில்லை
0 Comments