தென் ஆப்பிரிக்காவில் நிலவிவரும் கடும் வறட்சியால், ஏற்கனவே இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி பாதிப்பை தந்து வரும்நிலையில், வறட்சியும் அந்நாட்டு மக்களை நிலைகுலைய செய்திருக்கிறது. எனவே, இதுதொடர்பாக அதிரடி முடிவு ஒன்றினை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

உலக அளவில் வறட்சியால் பாதிக்கப்படும் கண்டங்களில் முதன்மையானது ஆப்பிரிக்கா கண்டமாகும்.. இதிலும் தென் ஆப்பிரிக்காவின் நிலைமையை கேட்கவே வேண்டியதில்லை.

வானிலையில் எந்த மாற்றம் வந்தாலும், அதனால் மோசமாக பாதிக்கப்படுவது ஆப்பிரிக்கா நாடுகளாகவே இருக்கின்றன. அதேபோல, வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, கடுமையான பட்டினிக்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

இதில், ஜிம்பாப்வே நிலைமை படுமோசமாகும்.. இதன் வடகிழக்கு பகுதியில் உள்ள முட்ஸி என்ற மாவட்டமும் எப்போதுமே வறட்சியின் பிடிக்குள் சிக்கி விடும்.. இவர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரமே விவசாயம்தான்.

இதனால் விளைச்சலில் பாதிப்பு ஏற்படும்போது, வாழ்வாதாரம் பாதித்து பொருளாதாரமும் பாதித்துவிடுகிறது. இதனால், குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில், தங்கள் குழந்தைகளை 25 டாலர்கள் செலுத்தி பள்ளியில் சேர்க்க முடிவதில்லை.. அப்படியே பள்ளியில் சேர்த்தாலும், மதிய உணவு குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. எனவே, தங்கள் குழந்தைகளை படிக்கக்கூட இவர்களால் அனுப்ப முடியாத சூழல் உள்ளது.

சமீபத்தில் எல்நினோ புயல் பாதிப்பின்போதுகூட, இப்படித்தான் நிலைமை ஏற்பட்டு, ஒருவேளை மட்டுமே குடும்பத்தினர் உணவு சாப்பிட்டார்கள். ஜிம்பாப்வேயில் மட்டும் 5,80,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக சமீபத்தில் ஐநா ஆய்வு ஒன்றில் கூறியிருந்தது. ஆக, ஒருபக்கம் வறட்சி அல்லது வெள்ளப்பெருக்கு என மாறி மாறி ஆப்பிரிக்க மக்களை வறட்சியிலேயே வைத்து வருகிறது.

இப்போதைய துயரம் என்னவென்றால், தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில், கடுமையான வறட்சி காரணமாக, மக்களுக்கு உணவளிப்பதற்காக, வனவிலங்குகளை கொல்ல, அந்த நாட்டு அரசு முடிவெடுத்திருக்கிறதாம். கடந்த 2023 முதல் -லிலிருந்தே இப்படியான வறட்சியில் நமீபியா சிக்கி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவின் மக்கள் தொகையில் பாதியளவு, அதாவது சுமார் 14 லட்சம் பேர் நமீபியாவில்தான் இருக்கிறார்கள். இவர்கள் பசியிலும், பட்டினியிலும் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறார்கள். இந்த பகீர் தகவலை கடந்தமாதம்கூட ஐ.நா. அறிக்கை மூலம் வெளியிட்டிருந்தது.

அதனால்தான், இவர்களுக்கு சாப்பாடு தருவதற்காக, காட்டிலுள்ள மொத்தம் 723 வனவிலங்குகளை கொன்று, அவைகளின் இறைச்சியை உணவாக பயன்படுத்த நமீபியா முடிவெடுத்துள்ளது.

அந்தவகையில், 300 வரிக்குதிரைகள், 100 காட்டெருமைகள், 50 இம்பாலா மான்கள், 100 எலான்ட் வகை மான்கள், 30 நீர்யானைகள் 83 யானைகள் என 723 விலங்குகளையும் கொல்லப்போகிறதாம்.. இப்படித்தான், இதே திட்டத்தின்கீழ், ஏற்கனவே ஒருமுறை, 150 விலங்குகள் கொல்லப்பட்டு, அதிலிருந்து 63 டன் இறைச்சி பெறப்பட்டிருக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகள் என்றாலே யானைகள்தான் உலக பிரபலமானது.. அதிலும் மிகப்பெரிய ஆப்பிரிக்க சவானா யானைகள் இப்போது அழிந்து வரும் பட்டியலில் இருக்கிறதாம்.

இப்படிப்பட்ட சூழலில், கடுமையான வறட்சியால், பட்டினியில் கிடக்கும் மக்களுக்காக இந்த யானைகளையும் கொல்லப்படுவது மிகப்பெரிய கவலையை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.. குடிமக்களுக்காக நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கு, அந்த நாட்டு அரசியலமைப்பில் இடம் இருக்கிறது என்கிறார்கள்.. ஆனாலும் யானைகள் கொல்வதை பலரால் ஜீரணிக்கவே முடியவில்லையாம்.

ஜிம்பாப்வே, ஜாம்பியா மற்றும் மலாவி உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பசி நெருக்கடியை பேரழிவு நிலை என்று அறிவித்திருக்கின்றன.. இந்த லிஸ்ட்டிலில் நாம்பியாவும் இணைந்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு பட்டினி நமீபியாவை வாட்டி வதைத்து கொண்டிருப்பதும்., இதற்காக 723 விலங்குகள் கொல்லப்படுவதும் உலக மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.