களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த 3 பேர் பாலத்தில் வைத்து இதனை நிறுத்த முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவேரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று (25) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பழுகாமம் பட்டாரபுரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டுபிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் தியாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நண்பர்கள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் ஒன்றில் பழுகாமத்தில் இருந்து பெரிய போரதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்துள்ளார்.
இதன்போது ஆத்துக்கட்டு பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது குறித்த நபர் தவறி மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து தவறி ஆற்றினுள் விழுந்துள்ளார்.
இதைனையடுத்து பொலிஸார் பொதுமக்கள் உதவியுடன், மோட்டர் சைக்கிளையும் உயிரிழந்த நபரையும் மீட்டுள்ளனர்.
0 Comments