பத்தரமுல்லை, அக்குரேகொட, அருப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (18) காலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டமைக்கு பணத் தகராறு காரணமாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி கொலையை செய்த சந்தேக நபர் மாலம்பே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கொஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குறித்த நபரின் சடலம் அப்பகுதியில் உள்ள வாகன பளுதுபார்க்கும் நிலையம் ஒன்றுக்கு அருகில் கிடந்துள்ளது.
தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments