எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டுள்ளது.
“தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025இற்கு அப்பால் செல்லும் செயல்முறை, ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி.., வெற்றிபெறும் தாய்நாடு , ஒன்றிணைந்த இலங்கை” ஆகிய 05 பிரதான கூறுகளை இந்த தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளடக்கியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனம் அடங்கிய www.ranil2024.lk இணையத்தளம் சற்று முன்னர் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், வரி நிவாரணம் வழங்குதல், பொருளாதார மேம்பாடு மற்றும் ‘உறுமய’ மற்றும் ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை செயல்படுத்தல், முதல் கட்டமாக, 100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தெரிவித்தார்.
பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறும் 50,000 பிள்ளைகளுக்கு கைத்தொழில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் தெரிவித்தார்.
‘ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும்’ ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, பொருளாதாரத்திற்கான திட்டம் மற்றும் ‘உறுமய’, ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கான சொத்துரிமையை, முறையாகவும் விரைவாகவும் வழங்கும் வேலைத் திட்டத்தை உறுதிப்படுத்த தனியான அதிகார சபை நிறுவப்படும் என்றும் அதன்மூலம் ‘உறுமய’ வேலைத் திட்டத்தின் ஊடாக இரண்டு மில்லியன் மக்களுக்கு காணி உரிமையும் கொழும்பு நகரில் அரசாங்கத்திற்கு சொந்தமான குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீடுகளின் உரிமையும் 4 வருடங்களுக்குள் வழங்கி, நிறைவுசெய்யப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடுத்தர மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க சலுகை வீட்டுக் கடன் வழங்குவது, குறைந்த வருமானம் பெறுவோருக்கு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையைப் பெறும் வசதிகளை ஏற்படுத்துவது, லைன் அறைகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய கிராமங்களை அமைத்து அதற்கான காணி உரிமை வழங்குவது ஆகிய விடயங்கள் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்“ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழ்மையான சமூகக் குழுக்களை பிரதேச அபிவிருத்தித் திட்டங்களில் நிரந்தரமாக இணைந்துக் கொள்வதாகவும், பிரதேச உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஊழியர்களை பயன்படுத்தும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மக்கள் பிரிவு’ என்ற புதிய எண்ணக்கருவை அறிமுகம் செய்து, அதை பொருளாதாரத்தின் வலுவான பகுதியாக மாற்ற, ஒவ்வொரு பிரஜைக்கும் காணி அல்லது வீட்டு உரிமை பெறும் வாய்ப்பு உருவாக்கப்படும். அத்துடன், ‘தேசிய செல்வ நிதியம்’ (National Wealth Fund)” ஸ்தாபித்தல் மற்றும் கூட்டுறவுத் துறை முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்றும் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்“ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிச் சபை ஆகியவற்றில் அங்கத்துவம் பெறுவதற்கு பலமான தொழிற்சங்கப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும், அந்த நிதியத்தை அரசாங்கப் பணிகளுக்குப் பயன்படுத்துவதை உச்ச அளவில் குறைப்பதற்கு ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்“ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டித் தன்மை வாய்ந்த, ஏற்றுமதிசார், நவீன விவசாயக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி, பயன்பெறாமல் இருக்கும் 300,000 ஏக்கர் அரசாங்க நிலத்தை வர்த்தகப் பயிர்களுக்கு ஒதுக்கீடு செய்வதாக ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெற் பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரம் அல்லது இதர தேவைகளைப் பூர்த்தி செய்ய நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 25,000 ரூபா நேரடியாக வைப்பிலிடப்படுவதோடு, போகத்திற்கு போகம் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிய மீன்பிடி படகுகள் முதல் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள் வரை, கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு சலுகை ரீதியிலான பொறிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும், 2025 ஆம் ஆண்டுக்குள் மீன்பிடி நகரங்களைச் சார்ந்து முறையான குடியிருப்பு மற்றும் பிற வசதிகளுடன் கூடிய மீன்பிடி நகரங்கள் உருவாக்கப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2035ஆம் ஆண்டாகும்போது, தற்போதைய வருடாந்த பால் உற்பத்தியை 380 மில்லியன் லீற்றரிலிருந்து 820 மில்லியன் லீற்றராக அதிகரிப்பதுடன், 2035 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு பால் பண்ணையாளர்களின் தற்போதைய வருமானம் 40 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையாக அதிகரிப்பதன் மூலம் கிராமிய பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது 2.5 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருடாந்த வருகை, அடுத்த 5 ஆண்டுகளில் 5 மில்லியனாக அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதோ, அதற்காக ஏற்கனவே 35 நாடுகள் ஒக்டோபர் 01 முதல் இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கண்டி, திருகோணமலை, காலி நகரங்கள் பிரதான சுற்றுலா மையங்களாக அபிவிருத்தி செய்யப்பட்டு, கிழக்குக் கடற்கரை மற்றும் யாழ்ப்பாணத்தை உயர்மட்ட சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும், இரணைவில, பெந்தோட்டை, ஹப்புத்தளை – வெலிமடை ஆகிய நகரங்களில் புதிய சுற்றுலா வலயங்கள் உருவாக்கப்படும் என்றும் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த, தற்போதுள்ள தடைகள் அனைத்தும் நீங்கப்படுவதோடு, முதலீட்டை ஊக்குவிக்க புதிய பொருளாதார ஆணைக்குழு, நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்க தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு, சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த சர்வதேச வர்த்தக அலுவலகம் அமைக்கப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
வலுசக்தி, போக்குவரத்து, துறைமுகம், கப்பற்றுறை, விமான சேவைகள் மற்றும் கைத்தொழில் துறைகள் கொண்ட முக்கிய பொருளாதார மையமாக திருகோணமலை மாற்றப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிய அளவிலான திட்டங்கள் மற்றும் கைத்தொழில்களை ஆரம்பிக்க தேவையான நிதியை வழங்க தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக 2025 ஆம் ஆண்டில் ‘Enterprise Sri Lanka’ நிறுவப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிய அளவிலான திட்டங்கள் மற்றும் கைத்தொழில்களை ஆரம்பிக்க தேவையான நிதியை வழங்க தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக 2025 ஆம் ஆண்டில் ‘Enterprise Sri Lanka’ நிறுவப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .
பொருளாதார நெருக்கடியால் பின்தங்கிய நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப வழங்கப்படும் 2.5 மில்லியன் ரூபா வரையிலான கடனுக்கான வட்டி வீதம் 5% அளவில் கொண்டு வரப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு வலுசக்தி செலவைக் குறைத்து, மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தை தடையின்றி வழங்குவது உறுதி செய்யப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் தொழில்நுட்ப ஊக்குவிப்புச் சட்டத்தை 2025 இல் நிறைவேற்றுதல் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இணைய சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் புரட்சியை விரைவுபடுத்துவதற்கும், இந்நாட்டுப் பொருளாதாரத்தின் டிஜிட்டல் பொருளாதாரப் பங்கை அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிப்பதற்கான அடித்தளம் அமைக்கப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் 2040ஆம் ஆண்டு தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்றவாறு நவீனமயமாக்கப்படும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் தலைமையிலான சுகாதார ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், சனத்தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அரச வைத்தியசாலைகளை நிர்மாணித்து, அடுத்த 15 வருடங்களில் இலங்கையின் சுகாதார சேவையை உயர் மட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்“ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறை முதல் நீர்கொழும்பு வரையிலான பிரதேசத்தை பாரிய தனி நகரமாக அபிவிருத்தி செய்தல், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் நகரங்களுக்கு அனர்த்தக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை தயாரித்தல், நகரங்களுக்கான நீர் விநியோகத்தை சீரமைத்தல் மற்றும் வறண்ட பகுதிகள், மலையகம், கடற்கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட நீர் பற்றாக்குறை பகுதிகளுக்கு குழாய் மூலம் நீர் வழங்கப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்.நதி திட்டத்தை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதாகவும், பூநகரியை வலுசக்தி கேந்திர நிலையமாக மாற்றியமைப்பதோடு, யாழ்ப்பாணத்தை தொழில்நுட்பக் கல்விக்கான மத்தியஸ்தானமாக மேம்படுத்துவதாகவும் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் ஊழல் குறைந்த நாடாக இலங்கையை மாற்றும் வகையில் 2023 இலக்கம் 09 ஆம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை செயற்படுத்தி 2025 – 2029 தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதாக ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதிக் குற்றங்கள் மற்றும் பணமோசடி தொடர்பான சட்ட திட்டங்களை வலுப்படுத்துதல், வெளிப்படையான முறையில் பொதுப் பெறுகைச் செயல்முறையை செயற்படுத்துதல், வரிச் சலுகை பெறும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுவதோடு தகவல் அறியும் சட்டம் மேலும் பலப்படுத்தப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு கௌரவம், வலிமை, பாதுகாப்பு, சுதந்திரம் உள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப பெண்களை வலுவூட்டும் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி பெண்களின் உரிமைகளுக்கான தனி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு 3% சலுகை வட்டியின் அடிப்படையில் அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபா சுயதொழிலுக்கான கடன் வழங்குவதாக ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments