தெதுரு ஓயாவில் நீராடச் சென்று காணாமல்போன தாய் மற்றும் இளைய மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (25) பிற்பகல் போகமுவ பிரதேசத்தில் இருந்து தெதுரு ஓயாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

இதனை அடுத்து நேற்று மாலை, பிள்ளைகளில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன் தாயையும் மற்ற பிள்ளையையும் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், காணாமல்போன தாய் மற்றும் பிள்ளையின் சடலங்கள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் பேரகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய தாயும் அவரது 9 வயது மற்றும் 5 வயதுடைய இரண்டு மகன்களுமே ஆவர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.