சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
Belfast இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Leah Paul அதிகபட்சமாக 81 ஓட்டங்களையும், Amy Hunter 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் Achini Kulasuriya மற்றும் Kavisha Dilhari ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி இலங்கை மகளிர் அணிக்கு 256 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
0 Comments