சிறுவன் ஒருவனை காபர்ட் வீதியில் இழுத்துச் சென்று தாக்கிய குற்றச்சாட்டில் நபரொருவர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனை தாக்கிய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (4) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு வீதி நாவலடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.


கிரேஜ் நடாத்தும் உரிமையாளர் ஒருவர் அவரது கிரேஜ்ஜில் சிறுவன் திருடியதாக குற்றம் சுமத்தி இறும்புக் கம்பியை கையில் வைத்தவாறு சிறுவனை காபர்ட் வீதியால் இழுத்துச் செல்லும் காட்சியை அவ் வீதியால் வந்த நபரொருவர் கைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்நிலையில், சிறுவன் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் கிரேஜ் உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.