பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜிநாமா செய்துள்ளதையடுத்து இந்தியாவின் காசியாபாத்தில் தரையிறங்கிய பிரதமர் ஷேக் ஹசீனா அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பங்களாதேஷில் போராட்டக்காரர்கள் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைவதற்கு முன்னதாகவே பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

இலட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி தலைநகரின் தெருக்களில் பேரணியாகச் சென்றுள்ளனர்.


இதேவேளை, பங்களாதேஷ் இராணுவத் தளபதி இன்னும் சிறிது நேரத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றத் தயாராக இருப்பதாகவும், அதற்கு முன்னதாக அவர் அரசியல் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.