கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்த அலிசாஹிர் மௌலானா எம். பி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , கட்சியிலிருந்து இடைநிறுத்தி , அவரிடம் விளக்கம் கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்