பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகளே இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.
அருகில் இருந்த சிசிடிவி கெமராவை சோதனையிட்ட போது, சிலர் வந்து பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் 3 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
0 Comments