255194 வரிக் கோவைகள் இந்த வருடத்தில் புதிதாக ஆரம்பம்

நாட்டில் 18 வயதைக் கடந்துள்ள சுமார் ஐந்து பில்லியன் பேருக்கு வருமான வரிக் குறியீட்டு இலக்கம் (TIN) விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேசிய இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்றுள்ள முறைமை மற்றும் விதிமுறைகள் தொடர்பான தெரிவுக் குழுவில் தேசிய வருமான வரி திணைக்களத்தின் வருமானம் தொடர்பான முன்னேற்றம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் 255194 வரிக் கோவைகள் இந்த வருடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த மே 31 வரை 1132598 புதிய வரிக்கோவைகள் காணப்படுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க சுய விருப்பின் பேரில் 1.5 இலட்சம் பேரே, தமக்கான வரி குறியீட்டு இலக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஏனையவர்கள் அதனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு அறிவுறுத்துவது முக்கியமாகும் என்றும் தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் தொகுதியை உருவாக்கி, சகலரதும் அடையாளத்தை இனங்கண்டு மேற்படி இலக்கத்தை பெற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் தெரிவுக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.