எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 39 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் அவர்களின் அத்தனை பேர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை அச்சிடுவது சிரமமான விடயமாக மாறியுள்ளது.

அதனால் இம்முறை வாக்குசீட்டு 02 அடி 03 அங்குலம் நீளமான வாக்குச் சீட்டாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

ஒரு பேப்பரில் இரண்டு பட்டியலாக வேட்பாளர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டால் அது 13.5 அங்குலமாக இருக்கும் என்றும் ஒரு நீண்ட பட்டியலில் பெயர் அச்சிடப்பட்டால் அது 02 அடி 03 அங்குலம் நீளமாக வரும் என அரச அச்சக கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.