Ticker

6/recent/ticker-posts

தாயுடன் நீராடச் சென்று காணாமல் போன சிறுவர்கள் இருவர் சடலங்களாக மீட்பு



திஸ்ஸமஹாராம, கவன்திஸ்ஸபுர பிரதேசத்தில் தாயுடன் நீராடச்சென்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு சிறுமிகளும் நேற்று மாலை தனது தாயுடன் நீராடச்சென்ற நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளது. அதன் பின்னர் தாயின் சடலம் நேற்று மீட்கப்பட்டதுடன், சிறுவர்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


குறித்த இருவரும் 09 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் எனவும் இன்று காலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலங்கள் நீர்மூழ்கி வீரர்களால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் திஸ்ஸமஹாராம, கவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.




Post a Comment

0 Comments