பேருந்தில் மாணவி ஒருருக்கு சில்மிஷம் செய்ததாக கூறப்படும் நபர் ஒருவர் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல கொரிய மொழி ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவரை சந்தேகநபர் பாலியல் தீண்டல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பேருந்தில் அமர்ந்திருந்த மாணவியின் மார்பு மற்றும் தொடையை தொட்டு அந்த நபர் சில்மிஷம் செய்துள்ளார்.

அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, 


மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் கொரிய மொழி ஆசிரியரின் அடையாள அட்டையை எடுத்து பொலிஸாரிடம் ஆஜர்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.


பின்னர், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணையின் போது, ​​அவர் ஓடி ஒளிந்திருந்த போதிலும், பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்ய முடிந்தது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.