Ticker

6/recent/ticker-posts

வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் 🇦🇫💙


முதன் முறையாக உலகக்கிண்ண தொடர் ஒன்றின் அரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவானது.

T20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.


அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களின் மந்தமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.


பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.


இந்த நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை இழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 12 ஓவரில் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் அந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறாது என்ற நிலை ஏற்பட்டது.


ஆனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒரு முனையில் லிட்டன் தாஸ் அரை சதம் அடித்து விளையாடினார். இறுதி வரை போராடிய லிட்டன் தாஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.


இதனால் பங்களாதேஷ் அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது.


ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.


வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் 🇦🇫💙 முதன் முறையாக உலகக்கிண்ண தொடர் ஒன்றின் அரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவானது

Post a Comment

0 Comments