இந்தியாவில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 32 ஆக உயர்ந்துள்ளதாகவும், அவர்களில் 12 குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு, நிலையத்தின் முகாமையாளர் உட்பட நால்வரை கைது செய்துள்ளது.
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சில சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதால், தீ விபத்து ஏற்பட்ட போது அங்கிருந்தவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் எடுத்து உடல்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
0 Comments