Ticker

6/recent/ticker-posts

பலஸ்தீனத்திற்கான முழு உறுப்புரிமை கோரிக்கை வெற்றி – ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றம்


ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது.

பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது.

143 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. அமேரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

25 நாடுகள் புறக்கணித்துள்ளது.

Post a Comment

0 Comments