Ticker

6/recent/ticker-posts

பெண்ணொருவருக்கு சொந்தமான 12 கோடி பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் முடக்கினர் .


காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான சுமார் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சொத்துக்கள் எவ்வாறு ஈட்டப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியிடப்படாமை காரணத்தினால், காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவரின் சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இதில், காலி தடல்ல பிரதேசத்தில் நான்கு மாடி கட்டிடமும் அக்மீமன பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் தேயிலை மற்றும் மிளகு காணியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சொத்துக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Post a Comment

0 Comments