இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக அடையாளம் காணப்பட்டுள்ள 7 அடி 2 அங்குல நபர் எதிர்கொள்ளும் சிரமங்கள்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே இலங்கையில் மிகவும் உயரமான குறித்த மனிதர் வசித்து வருகின்றார். இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதனாலேயே இலங்கையில் தற்போது உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார்.


இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான 45 வயதுடைய இவர் முச்சக்கர வண்டி ஓட்டுநராக இருக்கின்றார். இவர் அதிக உயரமாக இருப்பதனால் முச்சக்கரவண்டிக்குள் அமர்ந்திருப்பது கூட கடினமானதாகும்.


தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாகவும், இலங்கையில் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை எடுக்க முடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் 

பேருந்தில் இருக்கைகள் கிடைக்காதுவிட்டால் பயணிப்பது சிரமமானது எனவும் நீண்ட தூரம் பேருந்தில் பயணிப்பதாக இருந்தால் இருக்கைக்கு முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.