Ticker

6/recent/ticker-posts

மருதமுனையில் தனது தந்தையினால் படுகொலை செய்யப்பட்ட சகோ. ரிஹாஸ் இறைவனிடம் கையேர்ந்தும் போது...


இன்று மருதமுனையில் தனது தந்தையினால் படுகொலை செய்யப்பட்ட சகோ. ரிஹாஸ் இறைவனிடம் கையேர்ந்தும் போது...


மருதமுனையில் இன்று (14) காலையில் தனது தந்தையால் படுகொலை செய்யப்பட்ட சகோ. ரிஹாஸ் அவர்களை பற்றி அந்த மஹல்லாவாசி அவருடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டதாவது,


மருதமுனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜும்மா மஸ்ஜிதில் தனது ஐவேளை தொழுகையையும் விடாமல் முன் வரிசையில் தொழுவந்த ஒரு நல்ல தொழுகையாளியாகவும் நல்ல உச்சாகமாக எமது பள்ளிவாசலில் சுத்த வேலைகளிலும் அடிக்கடி தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நண்பன் ரிகாஸ் ஒருமுறை இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கும் போது ஆச்சரியத்துடன் எடுத்த புகைப்படங்கள்...


எல்லாம் வல்ல அல்லாஹ் இவரையும் இவரது சகோதரியையும் உயர்ந்த சுவர்க்கத்தில் நுழையச்செய்வானாக.

انا لله وانا اليه راجعون


யாருக்கும் சுமையாக 

என்னை ஆக்கி விடாதே 

என்றுதானே துஆ கேட்டேன்


இருபத்தைந்து வருடங்கள் எனை வளர்த்த தந்தையே உங்கள் கையால் என்னை அறுக்க நான் என்ன கொடுமை செய்தேன் 

தீமையே செய்ய தெரியாததுதான்

என்குற்றமா வாப்பா 


பாவம் செய்யாது வாழ்ந்த என்னை 

அறுக்க நீங்கள் வருகையிலே வாயிலே நோன்புடனே இருந்தேனே வாப்பா 

அப்போதும் உங்களுக்கு எங்கள்மீது 

இரக்கம் வரவில்லையே வாப்பா 


கத்தியை தீட்டிவந்த நீங்கள் 

குறிவைத்து எங்கள் கழுத்தை 

அறுப்பீர்கள் என்று 

கனவிலும் எண்ணவில்லை வாப்பா 

அறுக்க நீங்கள் வரும்போது அதைத் 

தடுக்கவும் எங்களுக்கு ஆரும் கற்றுத்தரவுமில்லையே வாப்பா 


வாப்பா தங்கச்சியும் நானும் இரவு ஸஹர் செய்யும்போது சுவர்க்கத்தில் வாழ கனவு கண்டோம் அது இவ்வளவு சீக்கிரம் உங்களால் கிடைத்ததே 

ஸஹர் உணவே எங்கள் இறுதி உணவாக ஆகியதே 


என் நண்பர்களே உங்களோடு நான் என்றாவது சண்டை போட்டதுண்டா 

நீங்கள் பட்டம்விடுவீர்கள்  நான் 

பார்த்து நிற்பேன் 

பந்தடிப்பீர்கள் நான் எடுத்துத் தருவேன் 

சிரிப்பீர்கள் சிரிப்பேன் ஸலாம் கூறுவேன் 

என்னை எதிலும் சேர்க்க மாட்டீர்கள் 

நான் கோபிப்பதில்லை ஏனெனில் நான் உங்களைப்போல புத்தியுள்ளவனில்லை 


என் 

நான் குறைவளர்ச்சியுடன் பிறந்தது 

என்குற்றமா 

என் தாய் தந்தையின் குற்றமா 

என்னையும் என் தங்கையையும் 

குறையாகப் படைத்த ரஹ்மானே 

இறுதியில் என் தந்தையையும் 

குற்றவாளியாக்கி விட்டாயே 


என் சமூகமே

அவ்ரத்தை மறைக்கத்தெரியாத மகளுக்கு 

தாயாக கடமை புரிந்த எங்க வாப்பா 

எங்க ரெண்டுபேரையும் எவ்வளவு அழகா வளர்த்தார் ஒருநாளேனும் எங்கள் வீட்டுப்பக்கம் நீங்கள் வரவில்லையே இன்று 

கூட்டம் கூட்டமாக வந்தீர்களாம் 

நாங்கள் குருதிப்புனலில் மிதப்பதைக்காண வந்தீர்களாம் 


என் சமூகமே

என் தங்கையும் வயசுக்கு வந்தவள்தான் 

எங்கள் மானம் காக்க ஆடைமாற்ற 

அறிவு புகட்ட ஒரு நாளாவது வருவீர்கள் என ஏங்கினோம் இப்போ குளிப்பாட்டி கபனிட வந்துள்ளீர்கள் 

வாருங்கள் எங்கள் குருதியில் கழுவிச் செல்லுங்கள் 

ஊரிலே பள்ளியிலே என்னைக்கண்டு 

ஸலாம் சொன்ன நீங்கள் 

எங்கள் சொந்தங்கள் எங்கள் வாப்பாவின் மனச்சுமையை அறியவில்லையே 


வாப்பா 

நாளை நாம் சுவனம் செல்வோம் 

ஆனால் 

உங்களைக் குற்றவாளிக் கூண்டில் 

ஏற்றிவிட்டுச் செல்கிறோம் எனும்போதே 

கவலை கொள்கிறோம் 

குற்றவாளிக் கூண்டில் நீங்கள் மட்டுமில்லை வாப்பா 

இந்த வாயில்லாப் பிள்ளைப்பூச்சிகளைக் கொன்ற உங்களுக்கு முன் பலர் நிற்கிறார்கள் வாப்பா 


உம்மா

எங்களை அழைத்துக்கொண்டீர்களா

நீங்கள் இருக்கும்போது பேதைகளான 

எங்களை உசிர் போல காத்தீர்கள் அவசரமாக இறையழைப்பை ஏற்று நீங்கள் போனபோது நானும் தங்கச்சியும் அழவில்லையும்மா ஏனென்றால் 

எங்களுக்கு அதுவும் தெரியாது தாயே 

உம்மா

நான் பள்ளிவாசல் சென்று துஆ கேட்பேன் உம்மாவிடம் எங்களை அழைத்துப்போ 

அல்லாஹ் என்று அல்லாஹ் அதை கபூலாக்கி விட்டான் தாயே 

உம்மா இந்த உலகில் வாழத்தெரியா நானும் தங்கச்சியும் உங்களோடு சேரந்து வாழ வருகிறோம் சுவனத்தில் எம்மை சேர்த்துவிடு யாஅல்லாஹ்!


உங்களுக்கு ஏதும் பாவம் செய்திருந்தால்

 என்னை மன்னித்து விடுங்கள்!


Post a Comment

0 Comments