Ticker

6/recent/ticker-posts

காஸா மக்கள் மீதான மிலேச்சத்தானமான தாக்குதலால் மனமுடைந்த ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் ராஜினாமா.



ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 24 நாட்களாக கடுமையான மோதல் இடம்பெற்று வருகின்றது. இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஹமாஸை அடியோடு அழிக்க இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

அதற்காக, காஸா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தரை வழித் தாக்குதலையும் தொடங்கியுள்ளது. இந்தப் போரில் இதுவரை 8,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் இயக்குநர் கிரேக், தனது இராஜிநாமா கடிதத்தை உயர் ஆணையரிடம் வழங்கியுள்ளார்.

அவரின் கடிதத்தில், காஸாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் ஐ.நா. அவை மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Post a Comment

0 Comments