தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும் அவரது ஒரு வயதுடைய மகளும் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

உயிரிழந்த பெண், தானும் குழந்தையும் தனது கணவர் மற்றும் கணவரின் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுவதாக மூன்று பக்க கடிதம் எழுதியுள்ளார்.

உயிரிழந்த பெண் கடிதம், திருமணச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஏரிக்கு அருகில் வைத்துவிட்டு இன்று (23) காலை தனது சிறு குழந்தையுடன் ஏரியில் குதித்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஏரியில் தாயின் சடலம் மிதப்பதாகவும், குழந்தையின் சடலம் ஏரியில் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KGLkRIkHz4A47YytsKqt9F