எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் வசிக்கும் 04 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர்.



அவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உல்லாசமாக சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் அந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காகச் சென்ற நிலையில், நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் வசிக்கும் இருபத்தி இரண்டு முதல் இருபத்தி மூன்று வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.

இருவர் கல்முனைக்குடியைச்சேர்ந்தவர்கள் மற்றையோர் சாய்ந்த மருதூரைச்சேர்ந்த ஒருவரும் சம்மாந்துறையை சேர்ந்த ஒருவருமாவார்.

மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 👇

https://chat.whatsapp.com/B7eV2rPN1dd6EKYwiqguf5