Ticker

6/recent/ticker-posts

புனித குர்ஆனை எரித்த டென்மார்க் அரசியல்வாதி, பிரிட்டனுக்குள் நுழையத் தடை


இங்கிலாந்து நகரமொன்றில் புனித குர் ஆனை எரிக்கப் போவதாகக் கூறிய டென்மார்க் அரசியல்வாதி ரஸ்முஸ் பலுதான் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு தடை விக்கப்பட்டுள்ளது. 

ஸ்ட்ராம் குர்ஸ் எனும், இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் கட்சியியன் ஸ்தாபகர் ரஸ்முஸ் பலுதான், 

ஏற்கெனவே புனித குர் ஆன் எரிக்கப்பட்ட போராட்டங்களை நடத்தியவர் இவர். இதனால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் ஆகியனவும் நiபெறுள்ளன. 

கடந்த ஜனவரி மாதம், சுவீடனிலுள்ள துருக்கிய தூதரகத்துக்கு முன்னர் அவர் புனித குர் ஆனை எரித்தமை சுவீடன், துருக்கி இடையே ராஜதந்திர உறவில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்தின் யோர்க்ஷயர் பிராந்தியத்திலுள்ள வோக்பீல்ட் நகரில் நாளை புதன்கிழமை புனித குர் ஆனை எரிக்கப் போவதாக பலுதான் கூறியிருந்தார்.

இதையடுத்து, அவர் ரஸ்முஸ் பலுதான் குடிவரவு கண்காணிப்புப் பட்டியலில் உள்ளதாகவும் அவர் பிரிட்டனிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய அமைச்சர் டொம் டுகேன்தாட் தெரிவித்துள்ளார்.

மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 👇

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments